வாங்க கலந்து கொள்ளுங்க .. கலக்குங்க ...
கிராமிய மணம் வீசும் விளையாட்டுக்களை வேடிக்கை பார்ப்பது எவ்வளவு இன்பமானது .. அதிலும் அதில் கலந்து கொள்வது என்றால் ... இதோஒரு பொன்னான வாய்ப்பு ...
கவிதைவானில் கவிமன்றம் தனது 150-வது கவியரங்கத்தை முன்னிட்டு வருகிற 12.11.2016 காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ல ஆந்திர மஹா சபாவில் போட்டிகளை நடத்த உள்ளது. என்னென்ன போட்டிகள் தெரியுமா ?
ஓவியம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நினைவாற்றல், மெதுவாக நடத்தல், சுழல் நாற்காலி, பல்லாங்க்குழி, ஏழாங்கல், தண்ணீர் நிரப்புதல், தாயக்கட்டம், குளமா கரையா, தனிப்பாட்டு, பாட்டுக்குப் பாட்டு, தனி நடிப்பு, பந்து கடத்துதல், பலூன் ஊதுதல், சத்துணவு தயாரித்தல், வேகமாக நட்த்தல், கண்ணாமூச்சு, ஆரத்தி தட்டு என்று ஏகப்பட்ட போட்டிகள் .. நுழைவுக் கட்டணம் ரூ.100/- என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு : 9994362336 / 9842577822 / 9894756506 / 8056594136 .
No comments:
Post a Comment