Sunday, 8 January 2017

வயலின் ஆசான் கோயமுத்தூர் உஷா கெளரவிப்பு

எனது அன்பிற்கினிய வயலின் ஆசான் கோயமுத்தூர் உஷா அவர்களுக்கு இன்று 08.01.2017 எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதினை மகளிர் உலகம் அமைப்பு வழங்கி கெளரவித்தது..



கெளரவிப்பு ..

புதுச்சேரியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் அதிகமான புத்தகங்கள் வாங்கியதற்காக நானும் என் மகள் கிருத்திகாவும் பாராட்டப்பட்டோம்.. அரசு செய்ய வேண்டிய வேலையை ஒரு அமைப்பு சிறப்பாக செய்து வருவது பாராட்டுக்குரியது. (அது சரி அரசுக்கு வேறு ஆயிரம் வேலைகள் இல்லையா என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது) .. அமைப்பாளர்களுக்கு நன்றி ...

கவிஞர்.மீனாட்சி - ஆரோவில் அவர்களுக்கு விருது

அக்கா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கவிஞர்.மீனாட்சி அவர்களுக்கு பாரதிச் செல்வர் விருதினை பாரதி பல்கலைப் பேரவை இன்று 08.01.2017 வழங்கி கெள்ரவித்தது. கவிஞர்.மீனாட்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..