Tuesday, 23 February 2016
கவிஞர்.உமாமோகன் கவிதை நூல் வெளியீட்
கவிஞர்.உமா மோகன் எழுதிய “துயரங்களின்
பின்வாசல்” கவிதை நூல் வெளியீட்டு விழா 21.02.2016 அன்று நடைபெற்றது. கவிதை நூலை சாகித்ய
அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.பிரபஞ்சன் வெளியிட்டார். நூலை அறிமுகப்பட்டுத்தினார்
கவிஞர்.சுகிர்தராணி. விழாவில் கவிஞர்.தி.பரமேசுவரி மற்றும் சக்திஜோதி அவர்களும் கலந்து
கொண்டு பேசினார்கள்.
Friday, 19 February 2016
நாளைய கலைஞர்கள் .. வாழ்க வளர்க ...
தண்ணீரின் அவசியம் குறித்து இன்று 19.2.2016 நடைபெற்ற முதலியார்பேட்டை அரசு பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் நடத்திய பொம்மலாட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. கண்ணியமான நிகழ்வும் கூட.. வாழ்த்துக்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் குறிப்பாக உடன் நின்ற தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் ... தொடரட்டும் உங்கள் பயணம்
"தண்ணீர்" குறித்த நிகழ்ச்சி - 19.02.2016
"தண்ணீரின் அவசியம் குறித்த நிகழ்வு இன்று 19.02.2016 வெள்ளிக்கிழமை மாலை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்றது.
விழாவுக்கு வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் திரு.க.இலட்சுமிநாராயணன், சமூக நலத்துறை அமைச்சர் திருமிகு.ராஜவேலு உள்ளிட்டோர் பொதுமக்களுடன் சேர்ந்து தண்ணீரை வீணாக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன
வழக்கம் போல் விழா குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்காததால் முழுமையாக இருந்து ரசிக்க முடியவில்லை. குறிப்பாக தண்ணீரின் அவசியம் குறித்து முதலியார்பேட்டை அரசு பள்ளி மாணவர்களின் பொம்மலாட்டம், பயிற்சி அளித்த ஆசிரியர்கள், எழுதி தயாரித்த ஆசிரியர், பயிற்சியின் போது ஊக்கமளித்த தலைமை ஆசிரியர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பொதுஇடத்தில் இப்படி ஒரு கண்ணியமான நிகழ்வினை தயார்த்து அளித்தமைக்கு. குழந்தைகளுடன் பெரியவர்களும் ரசித்துப் பார்த்ததைக் காண முடிந்தது. வாழ்த்துக்கள்.

Wednesday, 10 February 2016
புதுச்சேரியில் நான்கு நாட்கள் குறும்பட விழா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும், மும்பை பிலிம் டிவிஷனும் இணைந்து 5வது குறும்பட விழாவினை நாளை 11.02.2016 மாலை 4 மணிக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்திலுள்ள ஜவஹர்லால் நேரு கருத்தரங்கக் கூடத்தில் தொடங்க உள்ளன. 12.02.2016 முதல் 14.02.2016 வரை காலை 9 மணிக்குத் தொடங்கும் குறும்படத் திரையிடல் இரவு 8 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இடையிடையே குறும்படத் தயாரிப்பாளர்களும் உங்களுடன் கருத்துக்களைக் கேட்டு கருத்துக்கலை பரிமாறிக் கொள்வார்கள். சர்வதேச மற்றும் தேசிய குறும்படங்களைக் காணலாம். உண்மையான திரைப்படம் என்பது எது என்பதைக் காட்டும் அருமையான நிகழ்ச்சி மற்றும் வாய்ப்பு ..
தொடர்புக்கு ;
தோழர்.சு.இராமச்சந்திரன்
Subscribe to:
Comments (Atom)