Monday, 25 January 2016

>>>>>>>>>நலமாக வாழ்ந்திடு..
       நாட்டினைக் காத்திடு..!<<<<<<<<<<<


சிந்தனை செய்திடு  சிகரத்தை தொட்டிடு !
         செல்வத்தைப் பெற்றிடு  செருக்கினை விட்டிடு !
சந்தண மனமிடு   சரித்திர புகழெடு !
          சாதனை தொடர்ந்திடு  சகலமும் வைத்திடு !


சந்ததி வளர்த்திடு  சமத்துவம் போற்றிடு !
          சத்தியம் காத்திடு  சாயாமல் நின்றிடு !
 இந்தியன் என்றிடு  இதயத்தில் வைத்திடு !
         இல்லாமை மாற்றிடு  இலக்கைநீ எட்டிடு !

ஒற்றுமை விதைத்திடு  உன்பணி செய்திடு !
                     ஓடிநீ உழைத்திடு    ஊருக்குள் உயர்ந்திடு!
ஊற்றாக உதவிடு  உழைப்பாலே செலவிடு !
         ஊரோடு சூழ்ந்திடு  உணர்வுக்கு வித்திடு !


வேற்றுமை களைந்திடு  வேதனை போக்கிடு !
          வேர்வையை சிந்திடு  விளைச்சலை கண்டிடு !
நாற்றாக வளர்ந்திடு  நற்கனி தந்திடு !
         நலமாக வாழ்ந்திடு  நாட்டினைக் காத்திடு !

                                -கண்ணன்சேகர்.

   ***********இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்**************
--
P.Kannansekar,
13,Varada reddi street,
TIMIRI-632512,
Vellore dt, Tamil nadu, INDIA
cell:9698890108.

No comments:

Post a Comment