Sunday, 17 January 2016

புதுவைத் திருக்குறள் மன்ற நான்காமாண்டுத் தொடக்க விழா

புதுவைத் திருக்குறள் மன்ற நான்காமாண்டுத் தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் திருநாள் சிறப்புப் பொழிவு நிகழ்வு புதுச்சேரி சித்தன்குடி செயராம் திருமண மண்டபத்தில் 17.01.2016 மாலை நடைபெற்றது. முனைவர்.கலியன்.எதிராசன் (தலைவர் - புதிமம்_ அனைவரையும் வரவேற்றார். முனைவர்.அ.அறிவுநம்பி (செயலர் - புதிமம்) அறிமுகவுரை நிகழ்த்தினார். அரிமா.செ.செல்வகாந்தி விருந்தினரைச் சிறப்பித்தார். நான்காமாண்டுத் தொடக்கவுரையாற்றினார்













திருமிகு.இரா.ச.குழந்தைவேலனார் (தமிழ்ப்பேராசிரியர்). சன்னியாசிக்குப்பம் திரு.பாலக்ரிஷ்ணா ரெட்டியார் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் சிறப்புப் பொழிவினை முனைவர்.சரசுவதி இராமநாதன் (தமிழ்ப் பேராசிரியர், பள்ளத்தூர்) நிகழ்த்தினார். விழாவில் திருக்குறளைப் பரப்பும் பணிகளை மேற்கொண்டு வரும் திரு.எம்.எஸ்.வின்சென்ட் (அமெரிக்கா), செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன், திரு.பி.உதயகுமார் (செய்தியாசிரியர் - ராகவா தொலைக்காட்சி), திரு.சீனு.தாமோதரன், செல்வன்.மு.பிரகதீசுவரன், அரசு உயர்நிலைப்பள்ளி - உறுவையாறு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்

No comments:

Post a Comment