Monday, 21 December 2015

பாலியல் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் பாலியல் கொடுமைகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. காவல் துறையினையும் சேர்த்துப் பார்க்கும் முதல்வர் மாண்புமிகு ரங்கசாமி அவர்கள் மெளனம் சாதிக்கிறார்.  ஆளுங்கட்சியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தியிருக்கிறார். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் முதல்வர் அவர்களை போலீஸ் மைதானத்தில் வந்து சாவகசாமாக சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போகிறார். கட்சிக்காராக இருந்தாலும் போலீசில் சரணடையச் சொல்லி இருக்க வேண்டுமல்லவா ..? ஏன் செய்யவில்லை என்று பல கேள்விகள் நிற்கிறது .









பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் பாலியல் தொல்லை கொடுப்போரை கைது செய்ய வேண்டும் என்கிற ஒரே கோரிக்கையை முன் வைத்து பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் இன்று 21.12.2015 மதிய உணவு இடைவேளையின் போது ஆர்ப்ப்பாட்டம் நட்த்தியது. பாராட்டத்தக்க முயற்சி.. 

No comments:

Post a Comment