Thursday, 24 December 2015

சிவகாசியில் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க மாநாடு

தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் 24-ஆவது மாநாடு நாளை புது 26.12.2015 சனிக்கிழமை சிவகாசி முசுலீம் தொழில் வர்த்தக சங்கத் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. த.சி.ச-வின் மாநிலத் தலைவர் புலவர்.பூ.அ.இரவீந்திரன் தலைமை தாங்குகிறார். விழாவில் தமிழ்ச் சிற்றிதழ்களின் சமுதாயப் பங்களிப்பு எனும் தலைப்பில் எழுத்தாளர்.பொன்னீலன் (தலைவர், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) உரையாற்றுகிறார். விருத்துகள் வழங்கி உரையாற்றுகிறார் மாண்புமிகு.கே.டி.இராஜேந்திர பாலாஜி அவர்கள் (செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் - தமிழ்நாடு அரசு ). விழாமில் வெள்ளிவிழாசச் சிற்றிதழ் சிறப்பு விருது புதுவை பாரதி இதழுக்கு வழங்கப்படுகிறது. (ஆசிரியர்.பாரதிவாணர் சிவா).பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம் ...

No comments:

Post a Comment